உத்தர பிரதேச மாநிலம் துத்தி சட்டமன்ற தொகுதியின் பாஜக எம்எல்ஏ ராம்துலார் கோண்ட். இவர் மீது 2014 ஆம் ஆண்டு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. சிறுமியின் சகோதரர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இவர் மீது போக்சோ சட்டத்தில் மட்டுமல்லாது கற்பழிப்பு உள்ளிட்ட மேலும் இரண்டு பிரிவுகளிலும் வழக்கு பதியப்பட்டது.

இந்த சம்பவத்திற்கு பிறகு தான் அவர் தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதால் இந்த வழக்கு எம்பி மற்றும் எம்எல்ஏக்கள் வழக்குகள் விசாரிக்கப்படும் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. நேற்று முன் தினம் நடந்த இந்த வழக்கின் விசாரணையில் ராம்துலார் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

மேலும் ராம்துலாருக்கான தீர்ப்பு இன்று வழங்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் இரண்டு வருடங்களுக்கு மேல் இவருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டால் பதவி விலக வேண்டும் என்று கூறப்படுகிறது.