ரூஷிகேஷிற்கு அருகில் சிறுமி ஒருவரிடம் அத்துமீறியதாகக் கூறி, ஹரியானாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் சிலர் பொதுமக்களால் கடுமையாகத் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியை துன்புறுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட அந்த நபர்களை, ஆத்திரமடைந்த உள்ளூர் மக்கள் பிடித்து, பொது இடத்தில் வைத்து துணிகளை அகற்றித் தாக்கியதோடு, அவர்கள் வந்த வாகனத்தையும் அடித்துச் சேதப்படுத்தியுள்ளனர்.

இந்தச் சம்பவத்தின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த காவல்துறையினர், சம்பந்தப்பட்ட நபர்களைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

“>

மேலும் பொது இடங்களில் இதுபோன்ற அத்துமீறல்களில் ஈடுபடும் நபர்களுக்கு, சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொள்ளாமல் காவல்துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றாலும், இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.