குருகிராமத்தைச் சேர்ந்த ஹர்னவ் சிங் என்ற இளைஞர், உலகப்புகழ் பெற்ற கூகுள் நிறுவனத்தில் வேலை கிடைத்த செய்தியைத் தனது பெற்றோரிடம் பகிர்ந்து கொண்டபோது உருவான உணர்ச்சிகரமான தருணம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் ஹர்னவ் தனது பெற்றோருக்கு இந்த நற்செய்தியைத் தெரிவித்தவுடன், அவரது தாயார் மகிழ்ச்சியில் கண் கலங்கி, தன் மகனைக் கட்டிப்பிடித்து பெருமிதம் கொண்டார். இது பலரின் கண்களைப் பனிக்கும் வகையில் அமைந்திருந்தது. அதே சமயம், ஒரு வழக்கமான இந்தியத் தந்தையின் பாணியில், ஹர்னவின் தந்தை தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய விதம் நெட்டிசன்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
View this post on Instagram
“>
இந்நிலையில் அவர் தனது மகனை அன்புடன் செல்லமாகத் திட்டியதுடன், அந்தத் தருணத்தைக் கொண்டாடிய விதம் இணையத்தில் பலரால் பாராட்டப்பட்டு வருகிறது. “ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகளிடம் எதிர்பார்க்கும் தருணம் இது” எனப் பலரும் இந்த வீடியோவிற்கு உருக்கமான கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
