தமிழகத்தில் தனி நபர் கடன் திட்டத்தின் மூலம் அரசாங்கரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை, முதுகலை, தொழில்கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வி ஆகியவை பயின்ற சிறுபான்மையின மாணவர்களுக்கு 20 லட்சம் ரூபாய் வரை கடனுதவி வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். சுய உதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன் திட்டம் என்ற திட்டத்தின் மூலமாக சிறுபான்மையின மாணவர்களுக்கு 8% என்ற விகிதத்தில்,மாணவிகளுக்கு 5 சதவீதம் என்ற வட்டி விகிதத்தில் 30 லட்சம் ரூபாய் வரை கடனுதவி வழங்கப்பட உள்ளது.

இந்த கடனுதவியை சிறுபான்மை இன மாணவ மாணவிகள் அதற்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பத்துடன் சேர்த்து மாணவ மாணவியரின் ஜாதி சான்று, ஆதார் அட்டை, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று மற்றும் கடன் பெறும் தொழில் குறித்த விவரம், கல்வி கட்டணம் செலுத்திய ரசீது மற்றும் மதிப்பெண் சான்றிதழாகிய அனைத்து நகல்களையும் சமர்ப்பிக்க வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.