கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒண்டிப்புதூர் கம்பன் நகரில் கோகுல கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் எலக்ட்ரிக்கல் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கோகுலகிருஷ்ணனின் வாட்ஸ் அப் எண்ணிற்கு ஒரு லிங்க் வந்தது. அதில் யூடியூப் லிங்க்கிற்கு கொடுக்கும் ஒவ்வொரு லைக்கிற்கும் 150 ரூபாய் தரப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை நம்பி கோகுல கிருஷ்ணன் யூடியூப் லிங்க்கிற்கு லைக் கொடுத்தவுடன் அவரது வங்கி கணக்கிற்கு ஆயிரம் ரூபாய் வந்தது. அதன் பிறகு கூடுதலாக முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை நம்பி கோகுலகிருஷ்ணன் 10 1/4 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்துள்ளார். அதன் பிறகு அவருக்கு பணம் வரவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து கோகுலகிருஷ்ணன் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.