அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா நாளை பிரம்மாண்டமாக நடைபெற உள்ள நிலையில் பல மாநிலங்களிலும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கோவில்களிலும் நாளை சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானத்தை பாஜக நடத்தும் என்று அண்ணாமலை அறிவித்துள்ளார். பிறப்பு பூஜைக்கு அனுமதி கொடுப்பதில் திமுக அரசுக்கு என்ன பிரச்சனை? என கேள்வி எழுப்பிய அண்ணாமலை, தடையை கண்டு ஒருபோதும் அஞ்ச மாட்டோம் என்று கூறியுள்ளார். அதோடு திமுக இளைஞரணி மாநாட்டிற்கு அனுமதி கொடுத்து அதிக அளவில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளதாக சாடினார்.