
ஜப்பான் நாட்டில் தற்போது ஒரு புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அதாவது யமகெட்டா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் மனிதர்கள் தினசரி செரித்தால் மாரடைப்பு உள்ளிட்ட பல்வேறு நோய்களின் தாக்கம் குறைவது தெரியவந்துள்ளது. இதன் காரணமாக தற்போது அந்நாட்டில் ஒரு நாளைக்கு ஒருமுறையாவது கண்டிப்பாக சிரிக்க வேண்டும் என்ற புதிய சட்டத்தை இயற்றியுள்ளனர்.
குறிப்பாக இந்த சட்டம் யமகட்டா மாகாணத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதோடு இதனை ஊக்குவிக்கும் விதமாக மாதத்தின் 8-வது நாளில் சிரிப்பு தினம் கடைபிடிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிரிப்பது என்பது ஒருவரின் அடிப்படை உரிமை என்பதால் இதை கட்டாயப்படுத்தி சட்டமாக்க கூடாது என சிலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.