சிம்மம் ராசி அன்பர்களே,

இன்று தொல்லை கொடுத்தவர்கள் தொந்தரவு செய்தவர்கள் விலகி செல்லக்கூடும். வளர்ச்சி அதிகரிக்கும் நாள் என்று சொல்லலாம். எடுத்த காரியங்கள் எளிதில் முடியும். உயர் அதிகாரிகளின் பாராட்டுக்களால் மனமகிழ்ச்சி அடையும். எந்த சூழலையும் அனுசரித்து செல்வது நல்லது. பயணங்களின் போது கவனமாக இருங்கள். பணவரவு தாமதப்பட்டாலும் கண்டிப்பாக வரும். கோவில் குளங்களுக்கு சென்று வருவீர்கள். இஷ்ட தெய்வத்தின் அருள் துணையாக இருக்கும். புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும். சிந்தித்து செயல்படுவது நல்லது. இன்று மாணவர்கள் சிந்தித்து செயல்பட வேண்டும். படித்து முன்னேற வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். பெற்றோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். இன்று சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிஷ்ட எண்: 5 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் பச்சை நிறம்