கன்னி ராசி அன்பர்களே, 

இன்று எதிர்பார்ப்புகள் ஓரளவு பூர்த்தியாகும். தொழில் கூட்டாளிகளை நல்ல விதமாக நடத்துவீர்கள். புதிய தொழில் தொடங்கலாமா என்ற எண்ணம் மேலோங்கும். வரவேண்டிய தொகை வந்து சேரும் கணவன் மனைவிக்கிடையே இருந்த மன வருத்தம் நீங்கிவிடும். பிள்ளைகளின் உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்வீர்கள்.

சுய கௌரவம் மேலோங்கும். கன்னி ராசிக்கு கடந்த இரண்டு தினங்களாக இருந்த சந்திராஷ்டமம் முடிந்து விட்டதால் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். உடல் ஆரோக்கியம் சீராகும். இன்று பெண்களுக்கு கோரிக்கைகள் நிறைவேறும். முயற்சிகள் வெற்றியைக் கொடுக்கும். குடும்பத்தில் நல்ல விஷயங்கள் நடக்கும். ஆசைப்பட்ட பொருளை வாங்குவீர்கள்.

குடும்பத்திற்கு வேண்டியதை செய்து கொடுப்பீர்கள். இன்று மாணவர்கள் விளையாட்டு புத்தியை ஏரம் கட்டி விட்டு பாடங்களில் கவனம் செலுத்துவது நல்லது. பெற்றோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். இன்று சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிஷ்ட எண்: 2, 6 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் பச்சை நிறம்