சிம்ம ராசி அன்பர்களே,

இந்த நாள் உங்களுக்கு இனிய கனவுகள் மேலோங்கும். செயல்களில் சிறிய அளவிலான குளறுபடிகள் ஏற்பட்டாலும் பின்னர் சரியாகும். பொறுப்புடன் செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் போட்டிகள் ஏற்படும். பணி சுமை அதிகரிப்பது போல் தோன்றும். எதிர்பார்த்த பணவரவு தாமதமாகும். உடல் ஆரோக்கியம் சீராகும். குடும்பத்தில் அமைதியான சூழல் உருவாகும் நினைத்தது உடனே முடியவில்லை என்ற மன வருத்தம் இருக்கும்.

இன்று செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். வீண் பழி  வர வாய்ப்புள்ளதால் நிதானமாக செயல்படுவது நல்லது.  தாய் வழியில் உதவிகள் கிடைக்கும் சூழல் உள்ளது. மகிழ்ச்சி மிக்க நாளாக இன்றைய தினத்தை அமைத்துக் கொள்வது உங்கள் கையில் தான் உள்ளது. பெண்களுக்கு சுகபோக வாழ்க்கை அமையும். சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள். இஷ்ட தெய்வத்தின் அருள் உண்டு.

இன்று மாணவர்களுக்கு பொறுப்புகள் கூடிவிடும். வாழ்க்கையில் முன்னேற வேண்டும். குடும்பத்தை பார்த்துக் கொள்ள வேண்டும். இன்று  பொறுப்புகள் அதிகரிக்கும். சிறிய முயற்சியால் வெற்றி பெற முடியும். மூடநம்பிக்கைகளை தவிர்ப்பது நல்லது. இன்று சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு ஆஞ்சநேயர் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை  :  தெற்கு

அதிஷ்ட எண்  :  5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்  :  சிவப்பு மற்றும் வெள்ளை நிறம்