கடக ராசி அன்பர்களே,

இன்று மிகவும் நம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி பெற முடியும். முக்கிய செயல்கள் எளிமையாக நிறைவேறும். காரியங்கள் வெற்றியை கொடுக்கும். பிடித்தமான உணவு வகைகளை உண்டு மகிழ்வீர்கள். தொழில் வியாபாரம் செழித்து வளரும். புதிய தொழில் தொடங்கப் போட்ட திட்டம் வெற்றி பெறும். வீடு வாகனத்தில் கூடுதல் வசதி வாய்ப்புகளை பெற்றுக் கொள்ள முடியும்.

இன்று எப்படிப்பட்ட சிக்கல்கள் வந்தாலும் அதை சமாளிக்கும் மன பக்குவம் உள்ளது. வாக்குவாதங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. முன்கோபத்தை முற்றிலுமாக தவிர்த்து விடுங்கள். யார் என்ன சொன்னாலும் பொறுமை காப்பது நல்லது. சிறப்பான வாழ்க்கை இன்று அமைத்துக் கொள்வீர்கள். இன்று பெண்களுக்கு எந்த ஒரு பெரிய பிரச்சினையிலும் தீர்வு கிடைக்கும். துணிந்து போராடுவீர்கள். வெளியூர் சென்று வருவீர்கள்.

இன்று உங்கள் பொருட்களை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். இன்று மாணவர்கள் பொறுப்பாக இருக்க வேண்டும். பெற்றோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். புதுப்புது விஷயங்களை கற்றுக் கொள்ளுங்கள். மூடநம்பிக்கைகளில் கவனம் கொள்ள வேண்டாம். இன்று சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு ஆஞ்சநேயர் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை  :  தெற்கு

அதிஷ்ட எண்   : இரண்டு மற்றும் ஆறு

அதிர்ஷ்ட நிறம்  :  பச்சை மற்றும் சிவப்பு நிறம்