சிம்மம் ராசி அன்பர்களே,

இன்று உயர்வான எண்ணங்களை வளர்த்துக் கொள்வீர்கள். முன்னேற வேண்டும் என்று கடுமையாக உழைப்பீர்கள். முக்கிய புள்ளிகளின் சந்திப்பு ஏற்படும். பொருளாதார நிலையில் மாற்றம் ஏற்படும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். காரியங்கள் விரைவாக நடைபெறும். குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து அவர்களின் மதிப்பை பெறுவீர்கள்.

எந்த காரியத்திலும் சிந்தித்து செயல்படுவீர்கள். இனிய கனவுகள் மேலோங்கும். கிடைக்கும் வாய்ப்புகளை அற்புதமாக பயன்படுத்தி வெற்றி பெற முடியும். நிதி நெருக்கடிகளை சமாளித்து விடுவீர்கள். இன்று பெண்கள் வீட்டுக்கு தேவையானதை மட்டும் செய்யுங்கள். பணிகளை கொஞ்சம் கொஞ்சமாக முடிக்க பாருங்கள்.

இன்று மாணவர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள். படிப்பில் அக்கறை கொள்ளுங்கள். பெற்றோர் சொல் கேட்டு நடக்க பாருங்கள். இன்று எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அண்ணமாக வைத்துவிட்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: ஐந்து ஏழு மற்றும் ஒன்பது

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்