கடகம் ராசி அன்பர்களே,

இன்று எதிலும் தீர்க்கமாக யோசித்து முடிவெடுக்கும் சூழல் உருவாகும். சுகங்களும் சந்தோஷங்களும் தேடி வரும். சுற்றத்தாரின் உதவிகள் கிடைக்க பெறும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். தாமதப்பட்ட பணிகள் இன்று விரைவாக நடக்கும். திடீர் பயணங்கள் ஏற்படலாம். அடுத்தவர்கள் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது.

அனைவரிடமும் நல்ல பெயர் கிடைக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்வது சிறப்பு. யாரிடமும் நிதானமாக பேசுவது சிறப்பு. வெளிவட்டார பழக்க வழக்கங்கள் விரிவடையும். பொருளாதார நிலையில் மாற்றங்கள் ஏற்படும். அக்கம் பக்கத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். இன்று பெண்களுக்கு உயர்வான எண்ணம் ஏற்படும்.

பெண்கள் நினைத்த வாழ்க்கை அற்புதமாக அமைத்துக் கொள்ள முடியும். சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை மாற்றி அமைத்துக் கொள்வீர்கள். இன்று மாணவர்கள் மிகவும் பொறுப்புடன் இருப்பீர்கள். காலம் தவறாமல் பணிகளை முடிப்பீர்கள். பெற்றோரிடம் நல்ல பெயர் எடுப்பீர்கள். இன்று எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அண்ணமாக வைத்துவிட்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: ஐந்து, ஏழு மற்றும் ஒன்பது

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் மஞ்சள் நிறம்