
ஒரு பண்பாட்டின் பயணமாக சிந்து முதல் வைகை வரை என்ற ஒரு புத்தகத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புத்தகமானது சிந்து சமவெளி நகரத்திற்கும் திராவிட வரலாற்றுக்கும் இடையே உள்ள தொடர்புகளை எடுத்துரைக்கின்றது. இந்த புத்தகம் முன்னாள் இந்திய ஆட்சிப் பணி அதிகாரி R. பாலகிருஷ்ணன் எழுதிய journey of civilization: from Indus to vaigai என்ற புத்தகத்தின் தமிழாக்கம் ஆகும். பாலகிருஷ்ணன் எழுதிய இந்த புத்தகம் சிந்து சமவெளி நாகரகத்தின் வரலாற்றை கண்டறிய முயற்சிப்பதோடு இந்த நாகரிகத்தில் வாழ்ந்த மனிதர்களை திராவிடர்கள் என்றும் கூறுகின்றது