சென்னை மாவட்டத்தில் உள்ள கோவிலம்பாக்கத்தில் சந்திரராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது எனது மகன் இணையதளம் மூலமாக வேலை தேடிக் கொண்டிருந்தார். அப்போது சென்னை போரூரை சேர்ந்த பாலமுருகன் என்பவர் அறிமுகமாகி சிங்கப்பூரில் இருக்கும் இன்டர்டெக் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறினார்.

அந்த வேலைக்காக பாலமுருகன் 42 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பணத்தை வாங்கிக் கொண்டு வேலை வாங்கி தராமல் ஏமாற்றி விட்டார். மேலும் பாலமுருகன் போலியான பணி நியமன அணையை கொடுத்து ஏமாற்றி விட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த பாலமுருகனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவர் ஏற்கனவே பண மோசடி வழக்கில் கைதாகி சிறை சென்று வந்தது குறிப்பிடத்தக்கதாகும்.