சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து நேற்று முன்தினம் மாலை தனியார் பேருந்து நாமக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை லோகேஷ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். பேருந்தில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்நிலையில் சேலம்- நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அத்தனூர் அம்மன் கோவில் அருகே பேருந்து சென்று கொண்டிருந்தது. அதற்கு முன்னால் பாபு என்பவர் டேங்கர் லாரியை லாரியை ஓட்டி சென்றார். அப்போது திடீரென சாலையின் குறுக்கே நாய் ஓடியதால் டேங்கர் லாரி டிரைவர் சடன் பிரேக் பிடித்தார். இதனால் பின்னால் வந்த தனியார் பேருந்து டேங்கர் லாரியின் பின்புறம் பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் மருத்துவக் கல்லூரி மாணவிகளான சங்கீதா பிரியா, கிருத்திகா, பிரவீன் குமார், சரண்யா, அரசு கல்லூரி மாணவரான சௌந்தர் உள்பட 22 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்த 22 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின்னர் போலீசார் விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.