
உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கம் ஒன்றிற்கு சீதா என பெயரிடப்பட்டதற்கு எதிரான வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சீதாவை கடவுளாக வணங்குகிறோம். அவர் கோயிலில் இருக்க வேண்டும். காட்டுக்குள் அல்ல என விஷ்வ ஹிந்து பரிஷித் தரப்பில் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வாதம் முன்வைக்கப்பட்ட நிலையில் இதற்கு பதிலளித்த நீதிபதி, அன்பினால் பெயரிட்டிருப்பார்கள் கூறியுள்ளார்.
அதற்கு நாளை ஒரு கழுதைக்கு தெய்வத்தின் பெயர் வைப்பார்கள். எங்களின் மனதை இது புண்படுத்துகிறது என வி.எச்.பி. தரப்பு வாதிட்டுள்ளது. “துர்கை பூஜையின் போது நாங்கள் சிங்கத்தை வழிபடுகிறோம். ஒவ்வொருவரின் மனநிலையப் பொறுத்தது” என நீதிபதி பதில் அளித்துள்ளார்.