பிரபல முன்னால் கிரிக்கெட் வீரரும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவருமான சித்து பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பஞ்சாப் காங்கிரஸ் மீது அதிருப்தியில் இருக்கும் அவரை நாடாளுமன்ற தேர்தலில் அமிர்தசரஸ் தொகுதியில் போட்டியிட வைக்க பாஜக திட்டமிட்டுள்ளது.

அதனைப் போல மற்றொரு நட்சத்திர வீரரான யுவராஜ் சிங், குர்தாஸ்பூர் தொகுதியில் பாஜக சார்பில் வேட்பாளராக களம் இறக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் முக்கிய பிரபலங்கள் பலரும் பாஜகவில் இணைந்து வருவது குறிப்பிடத்தக்கது.