சின்னத்திரை ரசிகர்களின் பேராதரவைப் பெற்ற ‘எதிர்நீச்சல்’ தொடரின் மூலம் ‘ஜனனி’ என்ற கதாபாத்திரத்தில் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானவர் நடிகை மதுமிதா. தற்போது ‘அய்யனார் துணை’ உள்ளிட்ட தொடர்களில் பிஸியாக நடித்து வரும் அவர், நேற்று தனது பிறந்தநாளைக் கொண்டாடினார்.
தனது பிறந்தநாளை முன்னிட்டு மதுமிதா வெளியிட்ட வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. அந்த வீடியோவில், சிகரெட் வடிவிலான மெழுகுவர்த்தி (Candle) வைக்கப்பட்ட கேக் ஒன்றை அவர் ஊதும்போது, கண்ணிமைக்கும் நேரத்தில் முகம் அருகே நெருப்புப் பிழம்புகள் (Fire Sparks) சிதறிப் பறக்கின்றன.
View this post on Instagram
சினிமா பாணியில் அமைந்த இந்த அதிரடியான கொண்டாட்ட வீடியோவைப் பார்த்த ரசிகர்கள், அவருக்கு வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர். அதேவேளையில், இந்த வீடியோவில் உள்ளது உண்மையான நெருப்பு தானா அல்லது நவீன ‘செயற்கை நுண்ணறிவு’ (AI) தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டதா? என்ற விவாதமும் எழுந்துள்ளது.
முகம் மற்றும் கண்களுக்கு மிக அருகில் இது போன்ற நெருப்புப் பொறிகள் பறப்பது ஆபத்தானது என்பதால், “இது உண்மையானது என்றால் மிகவும் ரிஸ்க்கான விஷயம்; ஒருவேளை AI தொழில்நுட்பம் மூலம் எடிட் செய்யப்பட்டிருந்தால் மகிழ்ச்சி” என நெட்டிசன்கள் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். மேலும் சின்னத்திரை நட்சத்திரங்களின் இத்தகைய வித்தியாசமான கொண்டாட்டங்கள் அவ்வப்போது சர்ச்சைகளையும் ஆச்சரியங்களையும் ஏற்படுத்தி வரும் நிலையில், மதுமிதாவின் இந்த ‘ஃபயரி’ பர்த்டே வீடியோ தற்போதைய ‘டிரெண்டிங்’ ஆக மாறியுள்ளது.
