சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை சரியான நேரத்தில் பக்கத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்த்து உயிர் காக்கும் நற்கருணை உள்ளம் கொண்டவர்களுக்கு மாநில அரசு சார்பாக கூடுதலாக 5000 ரூபாய் கருணை தொகை  வழங்கப்படும் என்று விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி அறிவித்துள்ளார் . இது குறித்த அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை கோல்டன் ஹவர் என்று சொல்லக்கூடிய பொன்னான நேரத்தில் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்து உதவி புரிபவர்களை ஊக்கிவிக்கும் பொருட்டு இந்திய அரசின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் பரிசு வழங்கும் திட்டம் ஒன்றை அரசு அறிவித்தது.

அதன்படி ஏற்கனவே மத்திய அரசால் வழங்கப்பட்டு வந்த 5000 தொகையுடன் மாநில அரசின் பங்களிப்பாக சாலை பாதுகாப்பு பணியில் இருந்து கூடுதலாக 5000 மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.