ஊட்டியில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது மசினகுடி என்ற அழகிய ஊர். இதை சுற்றி வனப்பகுதிகளில் பல ரிசார்டுகளும் இருக்கிறது. அதிலும் மர வீட்டில் தங்குவது புதிய அனுபவத்தை கொடுக்கிறது. இரவு நேரங்களில் யானைகள் பிளிறும் சத்தத்தை கேட்க முடியும். இந்த காட்டுப் பகுதியில் தனியாக நடந்து செல்வது நல்லது கிடையாது. இயற்கை அழகை இயற்கையோடு இணைந்து ரசிப்பது பேரழகு. ஜங்கிள் ரைட் மசினகுடியில் கிடைக்கும். இங்கு மொத்த காட்டின் அழகையும் பார்த்து ரசிக்க முடியும். காடுகள் மலைகள் நிறைந்துள்ளதால் ட்ரெக்கிங் செல்வதற்கு ஏற்ற இடமாக உள்ளது. அதே சமயம் உரிய பாதுகாப்பு அம்சங்களோடு மட்டுமே ட்ரெக்கிங் செல்ல முடியும்.

இங்கு மரவகண்டி அணை உள்ளது. செழிப்பான மரங்கள், மலைகள் சூழ்ந்த அமைதியான இடம். அதனால் வனவிலங்கு புகைப்பட கலைஞர்கள் சொர்க்கமாக திகழ்கிறது . இங்கு முக்கியமான ஆறு மோயார். இந்த ஆற்றின் வழியாக படகு சவாரி செய்வது மகிழ்ச்சியை கொடுக்கும். இங்கு தெப்பக்காடு யானைகள் முகாம் மிகவும் பிரபலமான சுற்றுலா தளங்களில் ஒன்று. யானை பிரியர்களுக்கு இது அற்புதமான இடம். இங்கு யானைகள்  குளிப்பது, உணவு அருந்துவது, பயிற்சி செய்வது போன்றவற்றை பார்த்து ரசிக்க முடியும். அது மட்டுமில்லாமல் தேயிலை தோட்டங்களுக்கு மசனகுடி மிகவும் பிரபலமானது. பறந்து விரிந்திருக்கும் பசுமையான தேயிலை  தோட்டங்கள் கண்களுக்கு விருந்து படைப்பதாக இருக்கிறது.