மத்திய அமைச்சர் ஜிதின் பிரசாத் தனது சொந்த தொகுதியான உ.பி.யில் உள்ள பிலிபித் தொகுதிக்கு நேற்று சென்றுள்ளார். அப்போது, கான்வாயில் வந்த வாகனம் அவரது கார் மீது மோதியது திடீரென்று மோதியது. இந்த விபத்தில் மத்திய அமைச்சர் ஜிதின் பிரசாத் லேசான காயத்துடன் உயிர் தப்பியுள்ளார்.
இதனையடுத்து மற்றொரு காரில் சென்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை பார்வையிட்டார். நிவாரண நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். பின்னர் அங்கிருந்து திரும்பியுள்ளார்.
