திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று சாலையில் சென்ற நீதிமன்ற ஊழியர் வேலாயுதராஜ் என்பவரை மாடு முட்டியதால் பேருந்து அடியில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் நெல்லை மாநகராட்சி ஆணையர் தற்போது மாடு உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிவிப்பின்படி, மாடு வளர்ப்போர் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத விதமாக மாடுகளை கொட்டகையில் வைத்து பராமரித்துக் கொள்ள வேண்டும். சாலைகளில் மாடுகள் சுற்றி திரிந்தால் மாநகராட்சி பணியாளர்களால் மாடுகள் பிடிக்கப்படும் எனவும் உரிமையாளர்களிடம் அபராதம் வசூலிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது