ஜாதி மதமாக நின்றால் என்னை மறந்து விட, மொழி இனமாக நின்றால் என்னோடு வா என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். தென்காசி மாவட்டம் சுரண்டையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய சீமான், பிறப்பிலிருந்து இறப்பு வரை அனைத்தையும் தீர்மானிப்பது அரசியல் தான். அரசியல் ஒரு சாக்கடை என படித்தவர்களும் நல்லவர்களும் ஒதுங்கிக் கொண்டிருக்கிறார்கள். இதனால் அயோக்கியர்கள் உள் புகுந்து விட்டனர். அரசியல் என்பது என்ன?, கருணாநிதி மற்றும் ஸ்டாலின் படத்தை சட்டப்பையில் வைத்துக்கொண்டு நடப்பது அல்ல அரசியல் என்று கூறியுள்ளார்.