தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் கடந்த செப்டம்பர் மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி மகளிர் வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கொ.ம.தே.கவுக்கு நாமக்கல் மக்களவைத் தொகுதி ஒதுக்கப்பட்டது.

ஆனால் இந்த முறை திமுக வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்ற திமுகவினர் வலியுறுத்தினர். இதனைக் கேட்டுக் கொண்ட உதயநிதி, மகளிர் உரிமைத் தொகை பெறாதவர்களின் பட்டியலை தயாரித்து வழங்க உத்தரவிட்டார். இதுவரை ஆயிரம் ரூபாய் கிடைக்காதவர்களுக்கும் தேர்தலுக்கு முன்னதாக ஆயிரம் ரூபாய் தருவதற்கு தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.