சமூக வலைதளங்களில் லைக்குகளைப் பெறுவதற்காக இளைஞர்கள் செய்யும் விபரீத செயல்கள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில், சமீபத்தில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில், இளைஞர் ஒருவர் தனது பைக்கை ஓட்டிச் சென்று ஒரு ஆழமான சேறு நிறைந்த பகுதியில் இறக்குகிறார். சாகசம் செய்வதாக நினைத்து அவர் எடுத்த இந்த முயற்சி விபரீதமாக முடிந்தது. சிறிது நேரத்திலேயே அந்த பைக் சேற்றில் மாட்டிக்கொண்டது.

மேலும் இளைஞர் எவ்வளவு முயற்சி செய்தும் அவரால் பைக்கை வெளியே எடுக்க முடியவில்லை. இறுதியில், அந்த பைக் மற்றும் இளைஞரின் உடல் முழுவதும் சேறு பூசப்பட்டு, பார்ப்பதற்கு மிகவும் பரிதாபமாகவும் கேலிக்குரியதாகவும் மாறியது. தன்னுடைய ‘ஸ்டண்ட்’ ஆர்வத்தால் அந்த இளைஞர் செய்த இந்த செயல், அவருக்குப் பெரும் அவமானத்தைத் தேடித்தந்துவிட்டது.

“>

இதனால் “சாகசம் செய்கிறேன்” என்று கூறி தன் மானத்தை அவரே சேற்றில் எறிந்து கொண்டதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதுபோன்ற ஆபத்தான மற்றும் தேவையற்ற செயல்களில் ஈடுபடுவது உயிருக்கு ஆபத்தை விளைவிப்பதோடு, சமூகத்தில் கேலிப்பொருளாகவும் மாற்றிவிடும் என்பதற்கு இந்த வீடியோ ஒரு சிறந்த உதாரணமாகும்.