சவுதி அரேபியா அமைச்சகத்தின் அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற மருத்துவ பணியாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், சவுதி அரேபியா அமைச்சகத்தின் அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற ஆண் நர்சுகள், பல் ஆய்வக தொழில்நுட்பர், பல் உதவியாளர் மற்றும் காஸ்ட் டெக்னீசியன் போன்ற பதவிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இதில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு உணவு, இருப்பிடம் மற்றும் விமான பயண சீட்டு ஆகியவை அயல்நாட்டு வேலை அளிப்பவரால் வழங்கப்படும். எனவே விருப்பமுள்ளவர்கள் http://www.omcmanpower.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.