பாஜகவைச் சேர்ந்த வதோதரா எம்.பி. ரஞ்சன் பட், வரும் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்று தெரிவித்திருக்கிறார். நடைபெறவிருக்கும் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலில் பாஜக ஏற்கெனவே இவரது பெயரை அறிவித்திருந்தது. இந்நிலையில் அவர் பின்வாங்குவது கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. இதேபோல குஜராத் வேட்பாளர் பிகாஜி தாகூரும் போட்டியிடப் போவதில்லை என்று சற்றுமுன் அறிவித்தார்