
அமைச்சர் பொன்முடி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில், பெங்களூருவில் நடக்கவுள்ள எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் புறப்பட்டார். காலையில் இருந்து சோதனை நடந்து வரும் நிலையில், அது தொடர்பாக முதல்வர் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. தற்போது சென்னை விமான நிலையம் செல்லும் அவர், அங்கு சற்று நேரத்தில் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.