அதிமுக தலைமை கழக பேச்சாளர் காந்திமதி நாதன் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அதிமுக கொள்கை மற்றும் ஆட்சியின் சாதனைகளை தமிழகம் முழுவதும் கொண்டு சென்றது இவரின் பங்கு மிக முக்கியமானது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அன்பைப் பெற்ற இவர் இபிஎஸ்ஸுக்கு நெருக்கமானவர். இவரது மறைவுக்கு அதிமுகவினர் மற்றும் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.