ஷாருக்கானின் “ஓம் சாந்தி ஓம்” ஹிட் திரைப்படத்தின் வாயிலாக புகழ்பெற்ற நடிகர் நித்தேஷ் பாண்டே(51) திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பால் இன்று காலமானார். சல்மான் கானின் தபாங் 2 உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களிலும், தற்போது ஹாட்ஸ்டாரில் விறுவிறுப்பாக செல்லும் அனுபமா உள்ளிட்ட பல டிவி சீரியல்களிலும் அவர் நடித்துள்ளார். நித்தேஷ் பாண்டே மறைவிற்கு பாலிவுட் திரையுலகினர், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.