வீட்டு மின் இணைப்பு, பொது மின் இணைப்புதாரர்களுக்கு பெயர் மாற்றம் செய்ய ஜூலை 24 முதல் (ஞாயிறு தவிர) அனைத்து வேலை நாட்களிலும் சிறப்பு முகாம் நடைபெறும் என அரசு அறிவித்துள்ளது. பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களை நீக்கி கட்டணம் செலுத்தியவுடன் பெயர் மாற்றம் வழங்க சிறப்பு முகாம் நடக்கிறது. உரிய ஆவணங்களுடன் மின் நுகர்வோர் முகாமில் கலந்துகொண்டு பெயர் மாற்றுவதற்கான கட்டணம் ரூ. 726ஐ செலுத்தி சேவையை பெறலாம்.