நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, ஹிந்தியை ஏன் எதற்காக படிக்க வேண்டும். உங்கள் மொழி எப்படி உயர்வானதோ அதே போன்று தான் எங்கள் மொழியும் மிகவும் உயர்வானது. ஹிந்தி திணிப்பிற்கு எதிராக போராடி 800 பேர் உயிர் தியாகம் செய்துள்ளனர். இந்தியாவில் மூன்று மாநிலங்களில் மட்டும் ஹிந்தி மொழி பேசும் நிலையில் அதை ஏன் நாடு முழுவதும் செயல்படுத்த பார்க்கிறீர்கள்.

பொழுதுபோக்கு களத்தில் தலைவர்களை தேடுபவர்கள் என்னை தேட மாட்டார்கள். நான் முன்வைக்கும் கோட்பாட்டை ஏற்றுக் கொள்பவர்கள் என்னை பின்தொடர்வார்கள். தன்னை முன்னிறுத்திக் கொள்பவர்கள் கட்சியிலிருந்து விலகி செல்கிறார்கள். நாம் தமிழர் கட்சிக்காக நான் ஏன் செயல்பட வேண்டும் சீமானுக்கு பிறகு யார் தலைவர் என்ற போட்டியில் கட்சியிலிருந்து விலகி செல்கிறார்கள். மேலும் நேர்மையாக  கட்சி நடத்த வேண்டும் என்றால் கண்டிப்பாக சர்வாதிகாரியாக தான் செயல்பட வேண்டும் என்று கூறினார்.