தமிழ்நாட்டில் நேற்று முதல் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக கன்னியாகுமரியில் மீன்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. நாட்டுப் படகுகளில் பிடிக்கும் மீன்களுக்கான தேவையானது அதிகரித்துள்ளதன் காரணமாக அவற்றின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்த்தப்பட்டுள்ளது.

அந்த வகையில் நேற்று 700 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ வஞ்சிரம் மீன் இன்று ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல பாரை மீன் கிலோ 300-க்கும் விள மின் கிலோ 400க்கும் சங்கரா மீன் ரூபாய் 350-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மீன் விலை அதிகரிப்பால் மீன் பிரியர்கள் கவலையில் உள்ளனர்