மத்திய கிழக்கில் ஈரான் – அமெரிக்கா இடையிலான போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சுமார் 20 நிமிடங்கள் நீடித்த தனது உரையில், ‘நான்’ என்ற வார்த்தையை 40 முறைக்கும் மேலாகப் பயன்படுத்தித் தன்னைத்தானே ஒரு மாபெரும் வீரனைப் போல டிரம்ப் புகழ்ந்து தள்ளியுள்ளார்.

“ஈரானின் அணுசக்தித் திட்டத்தைத் தடுத்தேன், ராணுவத்தை அழித்தேன்” என அவர் தற்பெருமை பேசினாலும், அவர் பேசிக்கொண்டிருந்த போதே ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்கள் அவரது கூற்றுகளைப் பொய்யாக்கியுள்ளன.

போரினால் அமெரிக்கப் பொருளாதாரம் நலிவடைந்து வருவதால், டிரம்பிற்கான மக்கள் ஆதரவு 35 சதவீதமாகக் குறைந்துள்ளதோடு, 75 சதவீத அமெரிக்கர்கள் நாட்டின் நிலை குறித்துக் கவலை தெரிவித்துள்ளனர். யதார்த்தத்தை மறைத்துத் தன்னை ஒரு கதாநாயகனாகக் காட்டிக்கொள்ள டிரம்ப் முயல்வது அந்நாட்டு மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.