மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக தன்னுடைய தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட இருப்பதாக கூறியிருந்த நிலையில் முதல்வர் மு க ஸ்டாலின் தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளார் .அதில்,I.N.D.I.A. கூட்டணி அரசு மத்தியில் அமைந்தால், சமையல் சிலிண்டர் விலை ரூ.500ஆக குறைக்கப்படுமென திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அதில், திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்படும். வங்கியில் குறைந்தபட்ச தொகை இல்லையெனில் பிடிக்கப்படும் அபராதம் ரத்து செய்யப்படும். பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படாது. சென்னையில் உச்சநீதிமன்ற கிளை அமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது