வீட்டு உபயோகத்துக்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஆனது 1118.20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில் கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி மத்திய அரசு 200 ரூபாய் குறைத்தது. அதுமட்டுமின்றி 19 கிலோ எடை கொண்ட வணிகரீதியான எல்பிஜி சிலிண்டர் விலையும் 158 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.

இதுபோக உஜ்வாலா திட்டத்தின் மூலமாக பயனாளிகளுக்கு 200 ரூபாய் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மத்திய அமைச்சரவை இன்று உஜ்வாலா பயனாளிகளுக்கான எல்பிஜி மானியத்தை 300 ரூபாயாக உயர்த்தி உள்ளது. மேலும் உஜ்வாலா திட்டத்தின் கீழ் ரேஷன் கார்டுதாரர்கள் மத்திய அரசின் 200 தள்ளுபடி மற்றும் 300  மாநிலத்தின் படி கேஸ் சிலிண்டரை பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.