இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்ற வருகிறது. அதன்படி தற்போது தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பலரும் மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதனால் ஏராளமானோர் தங்களுடைய பணத்தை இழக்கின்றனர். அதன்படி பாகிஸ்தானில் சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களை பரப்பி வருவதாக தற்போது புகார் இணைந்துள்ளது.

இது தொடர்பாக தொலைத்தொடர்பு ஆணையத்தின் புகாரின் அடிப்படையில் PTA முக்கிய எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி உங்களுடைய மொபைல் ஃபோனில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையிலான இணைப்புகள் ஏதாவது வந்தால் அதனை கிளிக் செய்ய வேண்டாம். மேலும் பயனர்கள் எப்போதும் அதிகாரப்பூர்வை இணையதளத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இணையதளம் மோசடி தொடர்பாக புகார் அளிக்க 8484 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பலாம் என தொலைத்தொடர்பு ஆணையம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது