குணசேகர் இயக்கத்தில் சமந்தா, தேவ்மோகன் மற்றும் பலர் நடித்திருக்கும் சரித்திர படம் “சாகுந்தலம்”. தெலுங்கில் தயாராகி இருக்கும் இப்படம் பான் இந்தியா படமாக தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளிலும் வெளியாகிறது. இந்நிலையில் இந்த படம் வருகிற ஏப்ரல் 14ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த படத்தின் வெளியீடு 2 முறை அறிவிக்கப்பட்டு தள்ளிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது 3-வது முறையாக ஏப்ரல் 14 என்று புது தேதியை அறிவித்துள்ளனர். ஆகவே இதற்கு மேலும் படத்தைத் தள்ளிவைக்க மாட்டார்கள் என நம்பலாம்.