உத்தரப்பிரதேசம், வராணசியில் பெண்ணை அத்துமீறி தொட்ட இளைஞர் ஒருவரை, அப்பகுதி பெண்கள் அடித்து போலீசில் ஒப்படைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆகஸ்ட் 27ஆம் தேதி தில்பண்டேஸ்வர் தெருவில் சந்தைக்கு சென்று கொண்டிருந்த இளம்பெண்ணை, ஸ்கூட்டரில் வந்த இளைஞர் பின்புறத்தில் இருந்து தவறாக தொட்டு, அருவருப்பான வார்த்தைகள் பேசி தப்பியோடினார். சம்பவம் சிசிடிவியில் பதிவான நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
வீடியோவை பார்த்ததில், குற்றவாளி தன்வீர் அக்தர் என அடையாளம் காணப்பட்டார். இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் குடும்பத்தினருடன் சேர்ந்து குற்றவாளியின் வீடு சென்று, அவரை வெளியே அழைத்து வந்து பெண்கள் பலத்த அடியுடன் திட்டியும், முகத்தில் அறைந்தும் போலீசில் ஒப்படைத்தனர்.
वाराणसी में मुस्लिम युवती से अश्लीलता
बाइक सवार युवक ने किया बैड टच
परिजनों के साथ मिलकर युवती ने की पिटाई
आरोपी की पिटाई का वीडियो हो रहा वायरल#muslimgirl #CRIMENEWS #BreakingNews #BADTOUCH pic.twitter.com/8xQL5Xdkrb— Journalist Deepika singh (@Deepikasingh043) August 29, 2025
“>
சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோவில், புற்கா அணிந்திருந்த ஒரு பெண் அவரை பலமுறை அறைந்த காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், பெண்ணின் புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தன்வீரை கைது செய்து சிறையில் அடைத்தனர். காவல் நிலையத்தில் எடுக்கப்பட்ட மற்றொரு வீடியோவில், குற்றவாளி தனது தவறுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்வது காட்சியாகியுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் அதிருப்தியையும், பெண்களின் பாதுகாப்பு மீதான அச்சத்தையும் எழுப்பியுள்ளது.
