தமிழக அரசியலில் தவெக ஆட்சி அமைக்க விசிக ஏற்கனவே மின்னஞ்சல் மூலம் ஆதரவு கடிதம் அனுப்பிவிட்டதாகத் தகவல்கள் தீயாய் பரவிய நிலையில், தற்போது அந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விசிக தலைமை ஒரு அதிரடி விளக்கத்தை அளித்துள்ளது.
“விஜய்க்கு ஆதரவு அளிப்பது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை; கட்சியின் உயர் மட்டக் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து நாளை (மே 9) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்” என விசிக தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் ஸ்டாலினைச் சந்தித்த பிறகு திருமாவிடமிருந்து வந்துள்ள இந்த ‘சஸ்பென்ஸ்’ அறிவிப்பு, கோட்டை அரியணை யாருக்கு என்பதில் மீண்டும் ஒரு பெரிய இழுபறியை ஏற்படுத்தியுள்ளது.
மின்னஞ்சலில் கடிதம் போனதாகச் சொல்லப்பட்டது உண்மையா அல்லது நாளை திருமா சொல்லப்போகும் முடிவில் ஏதேனும் மெகா ட்விஸ்ட் இருக்குமா எனத் தெரியாமல் பனையூர் மற்றும் அறிவாலயம் ஆகிய இரு தரப்புமே நகம் கடித்தபடி காத்திருக்கின்றன.
