சதுரகிரி கோவிலுக்கு பொதுவாக அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். அதன்படி அமாவாசைக்கு நான்கு நாட்களும் பௌர்ணமிக்கு நான்கு நாட்களும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

இந்த நிலையில் சதுரகிரி மலைக்குச் செல்ல நாளை அதாவது மே 3-ம் தேதி முதல் நான்கு நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நாளை பிரதோஷம் மற்றும் ஐந்தாம் தேதி பௌர்ணமியை முன்னிட்டு சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காலை 7 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மலையேற அனுமதிக்கப்பட்டுள்ள பக்தர்கள் விரைவில் மலைக்கோவிலில் தங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சிறுவர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.