தமிழகத்தின் நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக முதலில் ஒரு ஆடியோவை சவுக்கு சங்கர் வெளியிட்டார். இதைத்தொடர்ந்து இரண்டாவது ஆடியோவை பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். இந்த ஆடியோ ஜோடிக்கப்பட்டது எனவும் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி என் குரலில் போலியாக உருவாக்கியுள்ளனர் எனவும் அமைச்சர் பிடிஆர் விளக்கம் கொடுத்திருந்தார். இந்நிலையில் பல நாட்களுக்குப் பிறகு அமைச்சர் பிடிஆர் ஆடியோ விவகாரம் குறித்து முதல்வர் ஸ்டாலின் மௌனம் கலைத்துள்ளார்.

அதாவது முதல்வர் ஸ்டாலின் உங்களில் ஒருவன் பதில்களில் அமைச்சர் பிடிஆர் ஆடியோ விவகாரம் குறித்து பேசி உள்ளார். அவர் ஆடியோ விகாரம் குறித்து அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனே இரண்டு முறை விளக்கம் கொடுத்துள்ளார். எனக்கு மக்கள் பணியை செய்யவே நேரம் சரியாக இருக்கிறது. எனவே ஆடியோ விவகாரத்தில் மட்டமான அரசியல் செய்வோருக்கு விளம்பரம் தேடி தர விரும்பவில்லை எனக் கூறியுள்ளார். மேலும் இதன் மூலம் ஆடியோ விகாரத்தில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பதவி நீக்கம் செய்யப்பட மாட்டார் என்பது தற்போது உறுதியாகியுள்ளது.