நைஜீரியாவின் அபாப்பா நகரில் மேம்பாலம் ஒன்றின் மீது எண்ணெய் ஏற்றி வந்த டேங்கர் லாரி விபத்துக்குள்ளானது. இதில் லாரியிலிருந்து எண்ணெய் அருவி போல கொட்டியது. விபத்து நடந்த இடத்திற்கு ஓடி வந்த மக்கள், காயமடைந்தவர்களுக்கு உதவாமல், கையில் கிடைத்த வாளி, கேன் மற்றும் பாத்திரங்களைக் கொண்டு கொட்டும் எண்ணெயை அள்ளத் தொடங்கினர். எப்போது வேண்டுமானாலும் டேங்கர் வெடித்துச் சிதறலாம் என்ற அபாயம் இருந்தும், உயிரைப் பணயம் வைத்து மக்கள் கூட்டமாகத் திரண்டு எண்ணெயைத் திருடியது பார்ப்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

​சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவைப் பார்த்த பலரும், “இது டீசல் என்பதால் எளிதில் தீப் பிடிக்காது, அதனால்தான் மக்கள் தைரியமாக அள்ளுகிறார்கள்” என்று கருத்துத் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், இந்த ஆபத்தான செயல் எந்த நேரத்திலும் ஒரு பெரும் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தக்கூடும் என்று சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.