அதிமுகவின் மூத்த நிர்வாகி ஜெயக்குமார் மற்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகிய இருவருக்கும் இடையே இருக்கும் நெருக்கமான நட்பை வெளிப்படுத்தும் ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், இருவரும் மிகவும் சாதாரணமாகவும், ஒருவருக்கொருவர் நெருக்கமாகவும் பழகும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

​குறிப்பாக, ஜெயக்குமாரிடம் பேசும்போது சீமான், “நீங்க ஒரு பெரிய இயக்கம், நாங்க சின்ன பசங்க” என்று ஜாலியாகவும் வேடிக்கையாகவும் கூறி விளையாடுவது பலரையும் கவர்ந்துள்ளது. மேடைகளில் காரசாரமாக அரசியல் பேசினாலும், தனிப்பட்ட முறையில் இவர்களிடையே இவ்வளவு அழகான நட்பு இருக்கிறதா என்று நெட்டிசன்கள் ஆச்சரியத்துடன் இந்த வீடியோவைப் பகிர்ந்து வருகின்றனர்.