பிரபல பாலிவுட் இயக்குனர் ஃபாரா கானின் வீட்டில் கடந்த 10 ஆண்டுகளாக சமையல்காரராக பணியாற்றி வரும் திலிப் முக்கியா, தற்போது சமூக வலைதளங்களில் ஒரு பெரிய நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார். பீகாரைச் சேர்ந்த ஒரு சிறிய கிராமத்திலிருந்து 12 ஆண்டுகளுக்கு முன்பு பிழைப்பு தேடி மும்பை வந்த திலிப், ஆரம்பத்தில் பல வீடுகளில் சமையல் வேலை செய்து கடும் சிரமங்களைச் சந்தித்தார். ஆனால், ஃபாரா கானின் யூடியூப் வீடியோக்களில் திலிப்பின் எதார்த்தமான பேச்சும், கள்ளமில்லாத சிரிப்பும் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்ததால், இன்று அவர் இந்தியா முழுவதும் பிரபலமான ஒரு முகமாக மாறிவிட்டார்.
திலிப்பின் கடின உழைப்பிற்குப் பரிசாக, தற்போது அவருக்கு மாதம் ஒரு லட்ச ரூபாய் சம்பளம் வழங்கப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு காலத்தில் வறுமையில் வாடிய அவர், இன்று பீகாரில் மூன்று அடுக்கு மாடி வீடும், சொந்தமாக பிஎம்டபிள்யூ (BMW) காரும் வாங்கும் அளவுக்கு உயர்ந்துள்ளார். தனது முதலாளி ஃபாரா கானின் உதவியுடன் குழந்தைகளைச் சிறந்த ஆங்கிலப் பள்ளிகளில் படிக்க வைத்து வரும் திலிப், அடுத்து இன்னும் விலை உயர்ந்த கார் வாங்க வேண்டும் என்ற தனது ஆசையை ஜாலியாகப் பகிர்ந்து வருகிறார். ஒரு சாதாரண சமையல்காரரின் இந்த அசாத்தியமான வளர்ச்சி பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
