தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) நிர்வாகி பெலிக்ஸ் பேசிய ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், “இன்று ஒவ்வொரு வீட்டிலும் விஜய் இருக்கிறார். ஆனால் பல நடிகர்கள் திரையுலகில் உச்சத்தைத் தொட்ட பிறகு, ஒன்று வெளிநாட்டில் போய் செட்டில் ஆகிவிடுகிறார்கள் அல்லது கார் ரேஸிற்குச் சென்றுவிடுகிறார்கள்” என்று அஜித்தின் பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல் பேசியுள்ளார்.
சில நடிகர்களைப் போல விஜய் வெளிநாட்டில் போய் செட்டில் ஆகவில்லை, கார் ரேஸ் ஓட்டவில்லை
-நடிகர் அஜித்தை குறிப்பிட்டு பேசிய தவெக நிர்வாகி பெலிக்ஸ்க்கு அஜித் ரசிகர்கள் கண்டனம் pic.twitter.com/JvopKdHNuE
— Spark+ (@SparkPluz_) February 28, 2026
மேலும், விஜய் அவர்களைப் போல இல்லாமல், தன்னை இத்தனை காலம் உச்சத்தில் வைத்திருந்த ரசிகர்களுக்காக நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் அரசியலில் இறங்கியிருப்பதாக அவர் புகழ்ந்து பேசியுள்ளார். அஜித்தை மறைமுகமாகத் தாக்கிப் பேசியதாகக் கருதும் அஜித் ரசிகர்கள், பெலிக்ஸிற்கு எதிராக சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
