தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விஜய் வலம் வரத் தொடங்கிய ஆரம்பக் காலத்தில், சங்கீதாவுடனான அவரது காதல் மற்றும் திருமணம் குறித்த கிசுகிசுக்கள் ஊடகங்களில் உலா வந்தன.

இது குறித்து பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்க விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் அவர்களைத் தனது வீட்டுக்கு அழைத்திருந்தார்.

அந்த சந்திப்பின் போது நடந்த ஒரு பரபரப்பான சம்பவத்தைத் தயாரிப்பாளர் பாலாஜி பிரபு தற்போது நினைவு கூர்ந்துள்ளார். எஸ்.ஏ.சி பத்திரிகையாளர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது, இடையில் உள்ளே வந்த விஜய்யைப் பார்த்து பத்திரிகையாளர் ஒருவர் சங்கீதா குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

அந்த கேள்விக்கு எஸ்.ஏ.சி கோபமடைந்ததோடு மட்டுமல்லாமல், விஜய் அந்த பத்திரிகையாளரைத் தனியாகக் கூப்பிட்டு, விரலை நீட்டி “ஜாக்கிரதை” என்று மிரட்டியதாகப் பாலாஜி பிரபு அதிர்ச்சிகரமான தகவலைத் தெரிவித்துள்ளார்.

27 ஆண்டுகால திருமண உறவுக்குப் பிறகு சங்கீதா விவாகரத்து கோரியுள்ள இந்தச் சூழலில், பாலாஜி பிரபுவின் இந்தப் பழைய பேட்டி சமூக வலைதளங்களில் மீண்டும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.