திரையுலகை பொருத்தவரை ஒரு படம் வெற்றி பெற்றால் அதனை பட குழுவினர் பார்ட்டி வைத்து கொண்டாடுவது வழக்கம். அவ்வகையில் தற்போது பொங்கலை முன்னிட்டு தெலுங்கில் வெளியான சங்கராந்திக்கு வஸ்துனம் என்ற படத்தின் வெற்றியை பட குழுவினர் பார்ட்டி வைத்து கொண்டாடியுள்ளனர்.
சென்னையில் நடந்த இந்த பார்ட்டியில் படத்தின் கதாநாயகியான ஐஸ்வர்யா ராஜேஷ், மீனாட்சி சவுத்ரி, நிக்கி கல்ராணி, வாணி போஜன், சங்கீதா, ஐஸ்வர்யா மேனன் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர். மேலும் இந்த பார்ட்டியில் பிரபல நடிகரான விஜய் சேதுபதி அவர்களும் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
