பல்கலைக்கழகங்களில் முதன் நிலை பட்டப்படிப்பு சேர்க்க காண பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மத்திய பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் இளநிலை மற்றும் முதுகலை அறிவியல் பட்டப்படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வுகள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இந்நிலையில் க்யூட் முதுநிலை தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

மாணவர்களின் தேர்வு முடிவுகள் அவர்கள் விண்ணப்பித்த பல்கலைக்கழகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளதாகவும் தரவரிசை பட்டியலை அந்தந்த பல்கலைக்கழகங்கள் வெளியிடும் எனவும் என்டிஏ வழங்கிய க்யூட் முதல் நிலை மதிப்பெண் சான்றிதழின் அடிப்படையில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு பல்கலைக்கழகங்கள் தொடங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.